விஜய் படத்தில் இருந்து ஜோதிகா விலகியது ஏன்?
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ஜோதிகா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஜோதிகா இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜோதிகாவுக்கு பதிலாக ‘ஓகே கண்மணி’ நாயகி நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் ஏன் என்பது குறித்து இயக்குனர் அட்லி உள்பட படக்குழுவினர் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை
ஜோதிகா தவிர ஏற்கனவே அறிவித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.