திமுகவை தில்லுமுல்லு கட்சி என்ற பிரேமலதாவுக்கு கருணாநிதி பதிலளிக்காதது ஏன்?
திமுகவை பற்றியோ அல்லது திமுக தலைவர்களை பற்றியோ எந்த கட்சி தலைவர்களாவது விமர்சனம் செய்தால் உடனடியாக பதிலடி தெரிவிக்கும் கருணாநிதி, ‘திமுக’வை தில்லுமுல்லு கட்சி என்று விமர்சனம் செய்த தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தின் விமர்சனத்திற்கு இன்னும் பதிலளிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் தேமுதிக கட்சி கூட்டம் ஒன்றில் அதிமுகவை அதிகமாக விமர்சனம் செய்த பிரேமலதா விஜயகாந்த், திமுகவையும் விட்டுவைக்கவில்லை. திமுக என்பது தில்லுமுல்லு கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆனால் பிரேமலதாவின் இந்த விமர்சனத்திற்கு கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு மேலாகியும் கருணாநிதி மெளனமாக இருப்பது பிரேமலதா சொன்னதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது பழம் இன்னும் நழுவி வரும் என்று காத்திருக்கின்றாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைத்தான் வைகோ தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியபோது, ‘மவுனம் சம்மததத்துக்கு அறிகுறி என்று வசனம் எழுதியவர் கருணாநிதி. பிரேமலதா விமர்சனத்துக்கு மவுனமாக இருப்பதால் அதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் அர்த்தம். கருணாநிதிக்காக வருத்தப்படுகிறேன். அவரது அரசியல் வாழ்க்கையில் இத்தகைய ஏமாற்றம் அவர் அடைந்திருக்கமாட்டார். திமுக இன்று ஏளனத்துக்கு ஆளாகி இருக்கிறது”