கழுதைகளை கடத்தி கொலை செய்யும் கென்யர்கள்: ஏன் தெரியுமா
கென்யா நாட்டில் கழுதைகளை கடத்தில் ஒரு கும்பல் கொலை செய்து வருவதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. எதற்காக கழுதைகளை கொலை செய்கின்றனர் என்பதை பார்ப்போம்
கென்யா நாட்டில் பாரம் இழுத்தல் சுமைகளை ஏற்றிச் செல்லுதல் ஆகிய பல பணிகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு சமீப காலமாக கழுதைகள் திருடப்பட்டு கொலையும் செயய்ப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்திய போது மருந்துக்காக கழுதைகள் கடத்தி கொல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. சீனாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் கழுதைகளின் தோல் முக்கிய பங்கு வகிப்பதாகவும், எனவே கழுதைகளின் தோலில் இருந்து அபூர்வ மருந்தின் முக்கிய மூலக்கூறுகளை எடுப்பதற்காகவும் கழுதைகள் பெருமளவில் கடத்தி கொல்லப்படுவதாக தெரிகிறது.
ஒருசிலரின் இந்த நடவடிக்கையால் கென்யாவில் கழுதை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது