கோச்சடையான் ரிலீஸ் திடீர் நிறுத்தம் ஏன்? திடுக்கிடும் தகவல்கள்.

16

கோச்சடையான் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்னை உள்பட அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கிய நிலையில் திடீரென கோச்சடையான் படத்தின் ரிலீஸ் நிறுத்தப்படுவதாகவும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற செய்தி வெளிவந்ததால் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சில தொழில்நுட்ப காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டாலும், ரிலீஸ் ஆகாததன் உண்மையான காரணம் குறித்து கோலிவுட்டில் பலசெய்திகள் கசிந்து வருகின்றன.

கோச்சடையான் திரைப்படத்தை திரையிட விநியோகிஸ்தர்கள் மிக அதிகளவில் தியேட்டர் அதிபர்களிடம் பணம் கேட்பதாகவும், இது ரஜினி படம் என்றாலும், அனிமேஷன் படம் என்றுதான் பரவலான கருத்து நிலவுவதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தியேட்டர்கள் மறுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கோச்சடையான் திரைப்படத்தை பார்த்த சில வி.ஐ.பிக்கள் படம் குறித்து பாசிவ்ட்டினான கருத்துக்களை கூறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் மிகவும் விரும்பிப்பார்க்கும் படமான தி அமேசிங் ஸ்பைடர்மேன் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதால், குழந்தைகளின் மனதை அந்த படத்தில் இருந்து கோச்சடையான் படத்திற்கு இழுத்து வருவது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்றும் ரஜினியிடம் சிலர் கருத்து தெரிவித்துள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோச்சடையான் மே 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply