விஜய் 60′ படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது ஏன்?
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் ‘விஜய் 60’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டாரை இயக்குனர் பரதன் அணுகியதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுக்கு அமைந்தது போன்று வலுவான கேரக்டராக இருந்தால் மம்முட்டி ஒப்புக்கொண்டிருப்பார் என்றும் ஆனால் இந்த படத்தில் அமைந்த வில்லன் கேரக்டர் முக்கியத்துவம் இல்லாதது என்பதால் மம்முட்டி மறுத்துவிட்டதகாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக ‘லிங்கா’ படத்தில் நடித்த ஜெகபதிபாபுவும் இன்னொரு வில்லனாக டேனியல் பாலாஜியும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.