கொரோனாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கு ஏன் கொடுப்பதில்லை? சமூக ஆர்வலர்கள் கேள்வி
இந்தியாவில் 130 கோடி ஜனத்தொகையில் இதுவரை வெறும் 40 பேருக்கும் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்தியா முழுவதும் வெறும் 40 பேர்களுக்கு மட்டுமே அறிகுறி இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து மிக அதிகமான விழிப்புணர்வை அரசும் பொதுமக்களும் ஏற்படுத்தி வருகின்றனர்’ ஆனால் அதே நேரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஹெல்மெட் போடாததால் உயிரிழப்பு ஏற்பட்டும், காயம் அடைந்தும் வருகின்றனர் இதற்கு அரசும் பொதுமக்களும் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்
தினமும் நூற்றுக்கணக்கானோர் ஹெல்மெட் போடாததால் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவுக்கு கொடுப்பதை விட அதிகமாக ஹெல்மெட் போடுவதற்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்