வெளிமாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்
மருத்துவ நுழைவு படிப்பான நீட் தேர்வை வெளிமாநிலங்களுக்கு சென்று எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிடிவி தினகரன் – எனது கட்சி கேரளாவில் நீட் எழுத செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும்.
*நடிகர் பிரசன்னா – நீட் எழுத செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பண உதவி செய்வேன்.
நடிகர் அருள்நிதி: 20 மாணவர்களின் செலவை ஏற்று கொள்கிறேன்
*ராஜஸ்தான் ஐபிஎஸ் ஆபீசர்ஸ் – தமிழ் மாணவர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய தயார்.
*தன்னார்வ அமைப்புகள் – மாணவர்களுக்கு தங்கும் வசதி, போக்குவரத்து வசதி செய்து தருகிறேன்.
மேலும் கேரள அரசு, தமிழக அரசு உள்பட பல உதவிகள் தமிழக மாணவர்களுக்கு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும் நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மற்றும் 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.