நீட் தேர்வு விவகாரம்: வெளிமாநில தேர்வு மையம் ஏன்?
தமிழக மாணவர்கள் சிலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது குறித்து பரபரப்பான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஏன் மையம் அமைக்கப்படவில்லை, வெளிமாநிலத்தில் அமைத்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த தகவல் பின்வருமாறு:
தமிழக மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைத்தது ஏன்? உண்மையில் 2017ஆம் ஆண்டில் 6 மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த்து. தற்போது 10மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுத விண்ணப்பித்தவர்களில் கடைசியாக விண்ணப்பித்தவர்களுக்கு இடப்பற்றாக்குறையினால் மற்ற மாநிலங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்தது. உச்சநீதிமன்றம் இது நிர்வாக முடிவு என்பதால் இதை மாற்ற முடியாது என்கிறது. அடுத்த வருடத்துக்குள் CBSE தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை என்று மாநில கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் இந்த பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கலாம். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி என 10 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரம் தொடங்கிய 10 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டன.
இதனால் அதன்பின் விண்ணப்பித்தவர்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தனர். இப்போது அந்த மையங்களும் நிரம்பி விட்டதால் பிகார், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நான்காயிரம் பேருக்கு மேல் விண்ணப்பித்து தேர்வு மையமாக இல்லாமல் இருந்த நகரங்கள் இந்த வருடம் தேர்வு மையம் ஆக்கப்பட்டுள்ளன. இது போன்று நாடு முழுவதும் 43 நகரங்களில் கூடுதல் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகம் கூடுதலாக தேர்வு மையங்களை பெற்றது. சென்ற வருடம் தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதைக் கணக்கில் கொண்டு இந்த வருடத்தை முடிவு செய்ததால் இந்த பிரச்சனை.