துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமனின் பதில்

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை: நிர்மலா சீதாராமனின் பதில்

உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு இங்கிருந்தே இரங்கல் தெரிவிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில், தமிழகத்தில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கு பாஜக தமிழக தலைவர்கள் மழுப்பலான பதிலை கூறி வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்டு கூறுவேன்’ என்று கூறியுள்ளார். அடுத்த முறை பிரதமரை சந்திக்கும்போது நிர்மலா சீதாராமன் இதுகுறித்து அவரிடம் அடுத்த பேட்டியின்போது கூறுவார் என்று எதிர்பார்ப்போம்

ஆனால் அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடந்து இத்தனை நாட்கள் கழித்து பிரதமர் இரங்கல் தெரிவித்தால் என்ன? தெரிவிக்காவிட்டால் என்ன? என்பதுதான் தூத்துகுடி மக்களின் எண்ணமாக இருக்கும்

Leave a Reply