எந்த பதவியிலும் இல்லாத ஒருவருக்கு உயர் போலீஸ் பாதுகாப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

எந்த பதவியிலும் இல்லாத ஒருவருக்கு உயர் போலீஸ் பாதுகாப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று கொண்டாலும், கிட்டத்தட்ட அதிமுக முழுவதுமே சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விரைவில் அவர் அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை நிரூபிப்பது போல் ஊடகங்களின் முதலாளிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்பட தினந்தோறும் பல விஐபிகள் சசிகலாவை மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர். மேலும் எந்த ஒரு அரசு பதவியும், கட்சி பதவியிலும் இல்லாத அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் குடியிருக்கும் எந்த பதவியிலும் இல்லாதவர்களுக்கு, ஒரு எஸ்.பி, நான்கு கூடுதல் எஸ்.பி, நான்கு துணை எஸ்.பி, ஏழு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 240 பேர் கொண்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலின் எழுப்பிய இந்த கேள்வி காவல்துறையினர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply