ஜெயம் ரவிக்கு தடை. விஷாலுக்கு குடையா? பொங்கி எழும் திரையுலகம்

ஜெயம் ரவிக்கு தடை. விஷாலுக்கு குடையா? பொங்கி எழும் திரையுலகம்

jayamகுறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்க வேண்டும் என ஜெயம் ரவிக்கு தடை போட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், விஷாலுக்கு மட்டும் இந்த விதியை தளர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் நேற்று ரிலீஸானது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் ஒன்றை ஜெயம் ரவி நேற்று முன் தினம் கூட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் தங்கள் புதிய விதியை சுட்டிக்காட்டி இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தந்தி டிவி, ஜெயா மேக்ஸ் டிவி மற்றும் பொதிகை ஆகியவை தவிர வேறு எந்த தொலைக்காட்சி நிருபர்களையும் அழைக்க கூடாது என தடை விதித்தது.

இதனால் வேறு வழியின்றி ஜெயம் ரவி பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார். ஆனால் நாளை விஷால் தனது பிறந்த நாளை ஓட்டியும், ‘பாயும் புலி’ பட ரிலீஸ் குறித்தும் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளார். இந்த கூட்டத்திற்கு அனைத்து முன்னணி தொலைகாட்சி நிறுவனங்களும் அழைக்கப்பட்டுள்ளன. ஜெயம் ரவிக்கு போட்ட தடையை விஷாலுக்கு ஏன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போடவில்லை என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு தடை போட்டுவிட்டு, விஷாலுக்கு மட்டும் குடை பிடிப்பது ஏன்? என ஒருசில மூத்த நடிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply