தெலுங்கு மாநிலங்களில் வியாபாரமாகாத புலி? அதிர்ச்சி தகவல்

தெலுங்கு மாநிலங்களில் வியாபாரமாகாத புலி? அதிர்ச்சி தகவல்

puli copyஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இந்த படத்தின் உரிமையை ஏரியாவாரியாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது.

வெளிநாட்டிலும், தமிழகத்திலும் இந்த படத்தை வாங்க போட்டி போட்டுக்கொண்டு விநியோகிஸ்தர்கள் முன்வந்தபோதிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ‘புலி’ படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் ரொம்ப யோசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் வேறு வழியில்லாமல் தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா பெயரை சொல்லி படத்தை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். ஒரு பிரபல நிறுவனம் ‘புலி’ படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.8 கோடிக்கு பெற்றுள்ளதாக வெளிவந்த செய்தியும் உண்மையில்லை என தற்போது கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடித்த ‘ஜில்லா’ தெலுங்கில் ஹிட் ஆகியிருந்தபோதிலும், பாகுபலியின் பிரமாண்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாத தெலுங்கு ரசிகர்கள் ‘புலி’யை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply