ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

6பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் உருவானது போல இலங்கையில் இருந்து தமிழீழம் பிரிவதும், ஒற்றுமையாக இருப்பதும் ராஜபக்சேவின் கையில்தான் உள்ளது. தமிழீழம் உருவாக வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியாது என பாஜகவின் தமிழக தலைவர்களுள் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பேசிய பொன்ராதாகிருஷ்ணன், இலங்கை தமிழர் நலனை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அத்தகைய இழிவான காரியங்களில் பாஜக ஒருபோதும் நடந்து கொள்ளாது என்றும்,கூறியுள்ள அவர் இலங்கைத் தமிழர் நலன் கருதியே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே ராஜபக்சேவுக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுவித்துள்ளது என்று கூறியுள்ளர்.

மேலும், அடுத்த 6 மாத காலத்திற்கு பாரதிய ஜனதா ஆட்சியை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அனைவரும் அரசை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், எந்த கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply