சமீப காலங்களில் நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு பெரிய பிரச்சனை இண்டர்நெட்டில் தங்களுடைய ஆபாச படங்களை வெளியிடுபவர்களால்தான் ஏற்பட்டுள்ளது. நடிகைகள் வசுந்தரா, ராதிகா ஆப்தே, லட்சுமிமேனன் என்ற வரிசையில் தற்போது முன்னணி நடிகை ஹன்சிகாவும் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நட்சத்திர ஓட்டல்கள்தான் என்று கூறப்படுகிறது. நடிகைகள் தங்குவதற்காக முன்கூட்டியே நட்சத்திர ஓட்டல்களில் ரூம் புக் செய்யப்படுவதால், ஓட்டல்களில் பணிபுரியும் சில ஊழியர்கள் முன்கூட்டியே அவர்கள் தங்கயிருக்கும் அறைகளின் படுக்கையறையிலோ அல்லது குளியல் அறையிலோ ரகசிய கேமிராவை பொருத்தி விடுவதாகவும், இதற்கென பயிற்சி பெற்றவர்கள் இந்த கேமரா வெளியே தெரியாதவாறு அமைத்து தருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது உள்ளூரிலும் சரி வெளியூரிலும் சரி நடிகைகள் ஓட்டல்களில் தங்க தயங்கி வருகின்றனர். படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு அருகில் ஏதாவது வீடு ஒன்றில் தங்க ஏற்பாடு செய்யும்படி தயாரிப்பாளர்களிடம் நடிகைகள் கோரிக்கை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிநவீன கேமராவில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அதன் பின்னணியையும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மாற்றிவிடுவதால் எந்த ஓட்டலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்படுகிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.