வரிவிலக்கு பெற தகுதியில்லாத படமா பாபநாசம்?

papanasamகடந்த வெள்ளியன்று ரிலீஸாகி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வசூல், அதன் ஒரிஜினல் படமான த்ரிஷ்யம் படத்தின் வசூலை அசால்ட்டாக கடந்துவிட்ட நிலையில், இந்த படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் காவல்துறையினர் இரண்டு சிறுமிகளைத் துன்புறுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையைக் கெடுத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொலை செய்த ஒருவர் அந்த பாவத்தை கழிக்க ஆற்றில் குளித்தால்போதும் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பள்ளி மாணவி குளிக்கும்போது செல்போனில் படம் பிடிப்பது போன்ற காட்சிகள் இளைஞர்களை பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால் இந்த படம் வரிவிலக்கு பெற தகுதியானதல்ல என்கிற பரிந்துரையை வரிவிலக்கு குழுவினர் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஆளுங்கட்சி ஆதரவு தொலைக்காட்சி கேட்டதாகவும், ஆனால் தயாரிப்பு தரப்பினர் சன் டிவிக்கு இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கொடுத்துவிட்டதாகவும், இதன் காரணமாகத்தான் இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply