அஜீத் படத்திற்கு ‘வேதாளம்’ டைட்டில் வைக்க என்ன காரணம்? புதிய தகவல்
‘தல’ அஜித் படத்துக்கு வேதாளம் என்று பெயர் ஒரு வழியாக வைத்தாகிவிட்டது. ‘வேதாளம்’ டைட்டிலை இரவு முழுவதும் உலக அளவில் டுவிட்டரில் டிரண்டுக்கும் கொண்டு வந்தாகிவிட்டது. இந்நிலையில் இந்த டைட்டிலை வைக்க காரணம் என்ன? இந்த டைட்டில் எப்படி கிடைத்தது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
முதலில் இந்த படத்தின் கதைக்கு ஏற்ப ‘வரம்’, சரவெடி’ ஆகிய டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் ஆனால் இந்த படத்தில் அஜீத்துக்கு ஒரு வில்லன் டைப் கெட்டப் இருப்பதாகவும், இந்த கெட்டப் ‘வேட்டையன்’ கேரக்டருக்கு இணையான கொடூர கேரக்டர் என்றும், எனவே அந்த கேரக்டரின் பெயரையே டைட்டிலாக வைக்க சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அஜீத்துக்கு வாலி, வில்லன், வரலாறு, வீரம் போன்ற “V”யில் தொடங்கும் வெற்றி படங்கள் வெளிவந்துள்ளதால், அந்த வரிசையில் இந்த படமும் இருக்க வேண்டும் என்பதற்காக ‘வேதாளம்’ என்று வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.