ரஜினி பட தலைப்பை வெறுத்தாரா விஜய்? புதிய தகவல்கள்
‘புலி’ படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்திற்கு முதலில் படக்குழுவினர் ‘மூன்று முகம்’ என்ற டைட்டிலை முடிவு செய்து வைத்திருந்தனர். இந்த படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்றும் ரஜினியின் பட டைட்டில் என்பதால், டைட்டில் மாஸ் ஆக இருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த டைட்டிலுக்காக ‘மூன்று முகம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி அனுமதியும் பெறப்பட்டது. ஆனால் திடீரென படத்திற்கு ‘காக்கி’ என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, பாபிசிம்ஹா நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு “வீரா” என்று டைட்டிலும், ஜீவா நடிக்கும் ஒரு படத்துக்கு “போக்கிரிராஜா” என்ற டைட்டிலும், தனுஷ் படத்துக்கு “தங்கமகன்” என்ற டைட்டிலும், என தொடர்ச்சியாக ரஜினி படப்பெயர்களை அனைவரும் வைத்து வருவதால், ரஜினியின் பட டைட்டிலை விஜய் வெறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பல தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் ‘காக்கி’ என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: Why Vijay hate Rajinikanth title?