இளையதளபதி விஜய் பிறந்தநாள் நாளை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் விழாவிற்கு எவ்வித தடங்களும் தமிழக மேலிடத்தில் வருவதை தவிர்ப்பதற்காகவே விஜய், பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதியதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேவை வரியை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம் ஒன்றை எழுதினார். இது சம்மந்தமாக எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில் திடீரென விஜய் கடிதம் எழுதுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த நிலையில், தற்போது விஜய் கடிதம் எழுதியதன் பின்னணி தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் விஜய் பிறந்த நாள் மிகப்பிரமாண்டமாக மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென மேலிடத்தின் அழுத்தம் காரணமாக பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற ஒரு நிலை இவ்வருடம் வரக்கூடாது என்பதற்காகவும், பிரதமரிடம் தனக்குள்ள நெருக்கத்தை வெளிக்காட்டிக்கொண்டு மேலிடத்தை பயமுறுத்துவதற்காகவும்தான் விஜய் திடீரென சேவை வரி குறித்த கடிதத்தை எழுதியுள்ளதாக கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் இந்த ராஜதந்திரத்தை மிகவும் தாமதமாக புரிந்துகொண்டுள்ள தமிழக மேலிடம் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், ஆனால் தற்போதுள்ள நிலையில் விஜய் மீது எவ்வித நடவடிக்கையை எடுத்தாலும், அது பிரச்சனையில் முடியும் என்பதால் அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.