விஜயகாந்த் ஏன் அப்பல்லோ செல்லவில்லை?
உடல்நலம் இன்றி அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து விஐபிக்களும் நேரில் வந்து உடல்நிலை குறித்து விசாரித்து சென்றுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு பிடிக்காதவர்கள் கூட அரசியல் நாகரீகம் கருதி அவரை சந்திக்க வந்ததுடன் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்தி சென்றனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததோடு, அதிமுகவின் உதவியால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுவரை முதல்வரை சந்திக்க அப்பல்லோ செல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரை சந்திக்க விஜயகாந்த் செல்லாதது அவராக எடுத்த முடிவு அல்லது பிரேமலதா எடுத்த முடிவா? என்பது குறித்து தேமுதிக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.