ரஜினி பட வில்லன் நடிகர் அக்ஷயகுமார் திடீர் கைது

ரஜினி பட வில்லன் நடிகர் அக்ஷயகுமார் திடீர் கைது

akshaya kumarலைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’ இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷயகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்ஷயகுமார் இன்று காலை லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

படப்பிடிப்பு ஒன்றுக்காக லண்டன் சென்றுள்ள அக்ஷயகுமாரிடம் முறையான விசா இல்லை என்றும் அவரிடம் சுற்றுலா பயணிகளிடம் இருக்கும் விசா இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டன் உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை. ஆனால் அக்ஷய்குமார் சுற்றுலாபயணியாக செல்லவில்லை. பாலிவுட் படம் ஒன்றின் படப்பிடிப்புக்குத்தான் சென்றுள்ளார். முறையான ஸ்டாம்புகள் அடங்கிய விசாவுடன் அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவரிடம் இருந்த விசாவில் ஸ்டாம்புகள் இல்லாததால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் லண்டனில் இருந்து வெளிவந்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அக்ஷயகுமார் ஒரு பிரபலமாக இருந்தபோதிலும் அவர் மக்களோடு மக்களாக வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவருக்கென தனி அறை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply