அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் வரும் 29ஆம் தேதி வெளிவருவதாக இருந்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 5ஆம் தேதிக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவார காலதாமதத்திற்கு சென்சார் அதிகாரிகள் தாமதப்படுத்தியதே காரணம் என்று கூறப்பட்டு வந்தாலும், இது திட்டமிட்ட சதியாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
‘என்னை அறிந்தால்’ படம் சென்சார் செய்ய விண்ணப்பிக்கப்படும் தேதியை முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஒரு முக்கிய புள்ளி, அதற்கு முன்பே ஒருசில படங்களை தயாரித்து முடித்துள்ள தயாரிப்பாளர்களை அணுகி என்னை அறிந்தால்’ படத்திற்கு முன்பே சென்சாருக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி அதற்கு சில லகரங்கள் பணமும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னை அறிந்தால்’ படம் விண்ணப்பிக்க இருந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்புவரை ஒருசில படங்கள் மட்டுமே சென்சார் செய்ய இருந்த நிலையில் திடீரென ஒரே நாளில் சில படங்கள் சென்சாருக்கு விண்ணப்பம் செய்ததால்தான் ‘என்னை அறிந்தால்’ படத்தை சென்சார் செய்ய தாமதமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அஜீத்துக்கு போட்டியாக செயல்பட்டு வரும் ஒரு முக்கிய புள்ளியின் சதியால்தான் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதை ஹாட் டாக்காக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.