விரைவில் இந்திய விமானங்களிலும் வைஃபை வசதி. மத்திய அரசு முடிவு

wifiஇந்திய விமானங்கள் அனைத்திலும் விரைவில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது விமானங்கள் பறக்கும்போது வை-ஃபை இண்டர்நெட் வசதியை பயணிகளுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் வைஃபை வசதியை இந்திய விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடைய, விமானத்துறை அமைச்சகமும், விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி செய்வது குறித்து டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply