விண்டோஸ் 10ல் வைபைவ் இணைப்பு

Windows-10-WiFi-Sense_Threat-You-Are-Unaware-Of-350x250

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தத் திட்டமிடுவோரும், தற்போது அதிகம் கவலைப்படுவது வைபைவ் செயல்பாடு குறித்துத்தான். விண்டோஸ் 10 சிஸ்டம் நம் வைபைவ் இணைப்பை, நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும், நாம் அறியாமலேயே வழங்குகிறது. இதனால், நம் ரகசிய நெட்வொர்க் செயல்பாடு அனைவருக்கும் தெரிய வருகிறது என்ற பயம் தான் அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது.

விண்டோஸ் 10 சிஸ்டத்தில், வைபைவ் இணைப்பில், இதுவரை இருந்த விண்டோஸ் சிஸ்டங்களில் இல்லாத வகையில் ஒரு சிறிய மாற்றத்தினையே மேற்கொண்டுள்ளது. இதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிலரே, இது போல தவறான தகவல்களை நம்பி கலக்கம் அடைந்துள்ளனர். மாறாக, விண் 10 நம் வைபைவ் இணைப்பினை என்ன செய்கிறது என்று இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், புதியதாக Wi-Fi Sense என்ற ஒரு வசதி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், நம் வைபைவ் இணைப்பினை, பாஸ்வேர்ட் இல்லாமலேயே வழங்குகிறது. விண் 10, தானாக, இவர்களை வைபைவ் இணைப்பில் இணைக்கிறது. இந்த சின்ன வசதி குறித்துத்தான், பலரும் அச்சமடைந்துள்ளனர்.

முதலில், விண்டோஸ் 10, உங்கள் வைபைவ் பாஸ்வேர்டை யாருக்கும் வழங்குவதில்லை. மேலும், இந்த விஷயத்தில், விண்டோஸ் 1-0 சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உள்ளது. வைபைவ் யாருக்கெல்லாம் தரப்பட வேண்டும். அல்லது மொத்தமாக அனைவருக்கும் தடை செய்யப்பட வேண்டுமா என்றெல்லாம் நீங்கள் முடிவு எடுத்து, செட்டிங்ஸ் அமைக்கலாம்.

எடுத்துக் காட்டாக, உங்கள் நண்பர் ஒருவர் Outlook, Outlook.com/Hotmail, Skype, or Facebookல் உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்தால், அவர் தானாகவே லாக் இன் செய்யப்படுகிறார். குறிப்பிட்ட ஒருவரை உங்கள் காண்டாக்ட் பட்டியலிலிருந்து தூக்கிவிட்டால், அவருக்கு இணைப்பு கிடைக்காது. மேலும், மேலே தரப்பட்டுள்ள சேவைகளில், எந்த சேவைத்தளத்திலிருந்து காண்டாக்ட் தகவல்களைப் பெற்று இயங்க வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைத்து கட்டுப்படுத்தலாம். “For networks I select, share them with my contacts” என்று இருக்கும் இடத்தில், டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும். உங்கள் கம்ப்யூட்டரில் வைபைவ் இயக்கம் இயங்கக் கூடியதாக இருந்தால் Network & Internet>>Wi-Fi>>Manage Wi-Fi Settings என்று சென்று “For networks I select, share them with my contacts” என்று இருப்பதில் டிக் குறியீட்டினை எடுத்துவிட்டால் போதும்.

முதன் முதலில், வைபைவ் நெட்வொர்க் ஒன்றுடன் நீங்கள் இணைகையில், மைக்ரோசாப்ட் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்கும். இந்த கேள்விக்கு No என்று கொடுத்துவிட்டால், விண் 10ல் உள்ள Wi-Fi Sense வசதி, அந்த நெட்வொர்க்கில் வேறு யாரையும் அனுமதிக்காது. நீங்கள் இவ்வாறு ஏற்படுத்தும் அமைப்பினை, பின்னர், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது வ Wi-Fi Sense செயல்பாட்டினையே நிறுத்திவிடலாம்.

தற்போது பலவாறாகப் பேசப்படும் இந்த சேவை குறித்து மேலும் அறிய,http://www.komando.com/tips/318802/stop-windows-10-from-automatically-sharing-your-wi-fi-with-others/ என்ற இணையதளப் பக்கத்தினைக் காணவும்.

Leave a Reply