விஷால் அணிக்கு அஜீத் ஆதரவு இல்லையா? நடிகர் சங்க தேர்தலில் திடுக்கிடும் திருப்பம்
சட்டமன்ற தேர்தலில் கூட இந்த அளவுக்கு பரபரப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. அதற்கு இணையாக நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்துள்ளது. வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விஷால் மற்றும் சரத்குமார் அணியினர் தங்கள் அணிகளுக்கு பிரச்சாரம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விஷால் அணியினர் ஏற்கனவே ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். விஜய்யிடம் ஆதரவு கேட்கும்போது அந்த குழுவில் விஷால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அஜீத்தையும் சந்திக்க விஷால் அணியினர் அப்பாயின்மெண்ட் கேட்டு வருவதாகவும், ஆனால் அஜீத் தரப்பில் இருந்து எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
விஜய், அஜீத், இருவரின் ஆதரவை பெற்றுவிட்டால் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என விஷால் அணியினர் உறுதியாக நம்பும் இந்த நேரத்தில் விஷால் அணிக்கு அஜீத் அப்பாயின்மெண்ட் கிடைக்காமல் இருப்பது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. அஜீத் பொது விஷயங்களில் தலையிடும் வழக்கம் இல்லாதவர். அவர் நடிகர் சங்கத்தில் ஓட்டு போட வருவாரா? என்பதே சந்தேகம். இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.