பீகார் தோல்வி எதிரொலி: அமீத் ஷா பதவி விலகுவாரா?

பீகார் தோல்வி எதிரொலி: அமீத் ஷா பதவி விலகுவாரா?
modi
சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் செய்தபோதிலும், நிதீஷ்குமார்-லாலு கூட்டணியிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் பாஜகவின் மூத்த தலைவர்கள் பிரதமர் மீதும் அமீத் ஷா மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பீகார் தேர்தலுக்கு வியூகம் வகுத்த தலைவர்கள் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என எல்.கே.அத்வானி வெளிப்படையாக குற்றஞ்சாட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் குற்றம் சுமத்துவது நியாயமற்றது என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர்நிதின் கட்கரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதின் கட்கரி கூறியபோது, ‘பீகார் தோல்விக்கு மோடியையும், அமித் ஷாவையும் குறை கூறுவது நியாயமற்ற ஒன்று. தோல்விக்கு பொறுப்பேற்று தேசிய தலைவர் அமித்ஷா பதவி விலக மாட்டார். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் மூத்த தலைவர் அத்வானியின் தலைமையின்போதும் பாஜக  தோல்வியடைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply