தேமுதிக-பாமக தேவையில்லை. அதிரடியாக தனித்து களமிறங்க அமித்ஷா அனுமதி?

தேமுதிக-பாமக தேவையில்லை. அதிரடியாக தனித்து களமிறங்க அமித்ஷா அனுமதி?

amit shahகடந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, பாமக என வலுவான கூட்டணியை அமைத்த பாஜக, தற்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தும் மாநில கட்சிகளை தனது கூட்டணியில் ஒருங்கிணைக்க முடியவில்லை. இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தேமுதிகவிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதன் தலைவர் விஜயகாந்த் சிறிதுகூட இறங்கி வராதது அமீத்ஷா உள்பட மேலிடத்தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் இனிமேல் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு தனித்து களம் காண தயாராகுமாறு மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாஜக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் கடைசி முயற்சியாக அதிமுக கூட்டணியில் பாஜகவை இணைக்கவும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக, இணைந்தால் பாஜகவை அதிமுக சேர்த்து கொள்ளும் என்றும், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் பாஜகவை அதிமுக ஒதுக்கிவிடும் என்றும் கருதப்படுகிறது. எனவே மீண்டும் தேமுதிக முடிவுக்காக பாஜக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply