சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா விரைவில் டிஸ்மிஸ். மத்திய அரசு அதிரடி

cbi director2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை வீட்டில் சந்தித்ததாக சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டதால் அவரை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து  நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிலரை தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு சிலநாட்களுக்கு முன் எழுந்தது. இதை அவரும் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை சி.பி.ஐ. இயக்குனர் தனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அதே வழக்கை விசாரித்து வரும் மற்ற அதிகாரிகளின் முன்னிலையில்தான் சந்தித்து பேசவேண்டும் என்பது சட்ட விதி. தனியாக சந்தித்தது சட்டவிரோதம்.

தனியாக சந்தித்து பேசியவர்கள் தனக்கு ஆதாயம் முயற்சித்திருக்கலாம் என  மூத்த வழக்கறிஞரும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பொது நல வழக்கில் ஆஜராகி வருபவருமான பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார்.

இதேபோல மற்ற சில வழக்குகளில் தொடர்புடையவர்களும் ரஞ்சித் சின்ஹாவை சர்வ சாதாரணமாக சந்தித்த உண்மை அவருடைய வீட்டின் உள்ள பதிவேடுகளின் மூலம் தெரிய வந்ததாகவும் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். இதுகுறித்து பிரசாந்த் சின்ஹா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில்  ரஞ்சித் சின்கா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்றும் பிரபல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply