கங்கை நதியை இன்னும் 3 வருடங்களுக்குள் சுத்தம் செய்துவிடுவோம் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி உறுதிபட கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த உமாபாரதி, ”புனித நதியான கங்கையை சுத்தம் செய்யும் பணிகள் குறித்து விவாதிக்க உத்தர பிரதேச மாநில அரசுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை வருகின்ற 20 ஆம் தேதி நடத்த உள்ளேன். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கங்கையை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கங்கை நதியின் பெரும்பாலான பகுதி உத்தர பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஓடுவதால், நதியை சுத்தம் செய்வதில் அம்மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. புனித நதிகள் நிறம் மாறி வருவது வருத்தம் அளிக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் கங்கையில் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ‘3 ஸ்டெப் பிளான்’ ஒன்றை போட்டுள்ளோம்” என்றார்.