உலகம் முழுவதும் தனது கவர்ச்சியால் கலக்கி வருபவர் அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தர்ஷியான் என்பது அனைவரும் தெரிந்ததே. திருமணமாகி குழந்தை பெற்றுவிட்ட நிலையிலும் அவ்வபோது டாப்லெஸ் மற்றும் நிர்வாண படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கிம்கர்தர்ஷியான் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு ஆபாச நடிகையான சன்னிலியோன் இந்திய திரையுலகை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் நிலையில் கிம்கர்தர்ஷியானின் வரவு பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் இயக்குனர் ஃபைசல் சயீப் என்பவர் ‘ஃபார் அடல்ஸ் ஒன்லி’ என்ற படத்தை ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துபாய் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா சிசெளசா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கிம்கர்தர்ஷியானுடன் தனுஷ் இணைந்து நடிக்கும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறுமா? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தியை இயக்குனர் ஃபைசல் சயீப் மறுத்துள்ளார். இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பது உண்மைதான் எனினும் தனுஷிடம் இதுவரை தன்னுடைய படத்தில் நடிக்குமாறு கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார்.