டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்குமா? பாஜக அரசின் அதிரடி முடிவு

dieselகடந்த காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே அரசு ஒப்படைத்தது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சி பாஜக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் எண்ணெய் நிறுவனங்களிடமே கொடுக்க அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணம் செய்து வருகின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாதம் இரு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
 
இந்நிலையில், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஆனால், இது குறித்த இறுதி முடிவை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Leave a Reply