மீண்டும் திமுகவில் இணைகிறாரா அழகிரி? அதிர்ச்சியில் ஸ்டாலின்
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் திமுகவின் முன்னணி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் வலம் வந்த மு.க.அழகிரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல் பிடுங்கப்பட்ட பாம்பாக சாதுவாக இருந்தார். ஆனால் தற்போது அவர் மீண்டும் திமுகவில் இணையவிருப்பதாகவும், இதற்கு கருணாநிதியும் ஓகே சொல்ல்விட்டதாகவும் கூறப்படுகிறது.
கருணாநிதி தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்து வருவதால் கிட்டத்தட்ட கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் ஸ்டாலின். இதை கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட குடும்பத்தில் உள்ள பலர் விரும்பவில்லையாம்
அதுமட்டுமின்றி திமுகவுக்கு சொந்தமான 7 அறக்கட்டளையும் தற்போது ஸ்டாலின் வசம்தான் உள்ளது. அதில் முக்கிய அறக்கட்டளையான முரசொலி அறக்கட்டளை ஸ்டாலின் மகன் உதயநிதி பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கட்சியையும், அறக்கட்டளைகளையும் ஸ்டாலினின் பிடியில் இருந்து கைப்பற்ற கருணாநிதி குடும்பத்தினர் அழகிரியை பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.