தேமுதிக தலைமையை ஏற்குமா மக்கள் நலக்கூட்டணி?
மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்தின் தேமுதிக வரும் என அதன் தலைவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென தனித்து நிற்கவுள்ளதாக விஜயகாந்த் அறிவித்ததால், வைகோ உள்பட மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் தேமுதிக கூட்டணிக்கு வருமாறு மக்கள் நலக்கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து மக்கள் நலக்கூட்டணியில் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிக கூட்டணிக்கு சென்றால் கண்டிப்பாக மக்கள் நலக்கூட்டணியின் நான்கு தலைவர்களும் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும். மேலும் தொகுதி பங்கீட்டில் விஜய்காந்த் சொல்வதைத்தான் நான்கு தலைவர்களும் கேட்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவரை முதல்வராக்க மற்ற நான்கு கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி வேலை செய்ய வேண்டுமா? என்ற ஈகோவும் இந்த தலைவர்களிடம் இருப்பதாக தெரிகிறது.
மேலும் விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற இந்த முடிவு இன்னும் எவ்வளவு நாளைக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறமுடியாது. திடீரென அந்த கட்சி திமுக அல்லது பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்டால் மக்கள் நலக்கூட்டணிக்கு தர்மசங்கட நிலை ஏற்படும். இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுமை காக்க முடிவு செய்திருப்பதாக அந்த கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன,.
Chennai Today News: Will Makkal Nala Koottani joins with DMDK?