காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அஸ்ரப் மிர், வானத்தை நோக்கிஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டு தனது வெற்றியைக் கொண்டாடியுள்ள செய்தி அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1JUChIl” standard=”http://www.youtube.com/v/ISNy8Q8reQE?fs=1″ vars=”ytid=ISNy8Q8reQE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4759″ /]
சோனாவர் தொகுதியில், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவைத் தோற்கடித்த எம்.எல்.ஏ. வான அஷ்ரப் மிர், தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வீடியோவில் ஏகே 47 ரக துப்பாக்கியைக் கைகளில் தூக்கி வானை நோக்கி பல ரவுண்டு சுடுவதைப் போன்று காட்சிகள் உள்ளன. அப்போது அவரைச் சுற்றி அவரின் ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்புவதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசியலில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியோட இதுகுறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அஷ்ரப் மிர் தரப்பில், துப்பாக்கியால் சுடவே இல்லை என்றும், ஏகே 47 ரக துப்பாக்கியை அவரது பாதுகாவலர் மட்டும்தான் வைத்து இருந்தார் என்றும், இதுபோன்று போலியான வீடியோவை யாரோ ஆகாதவர்கள் தயாரித்து வெளியிட்டிருப்பதாகவும் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது