இன்னும் 15 நாட்களுக்கு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில்தானா?
தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் இன்று மாலை கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார். மேலும் 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கால அவகாசமும் அளித்துள்ளார்.
இந்நிலையில் மீதியுள்ள நான்கு வருடங்களுக்கு பதவியை தக்க வைத்து கொள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பதவியேற்பு விழாவுக்கு பின்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதுவரை எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக தங்கள் தொகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா? அல்லது மீண்டும் கூவத்தூரில் தங்க வைக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.