மோடி அலைக்கு முற்றுப்புள்ளி. இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவு.

modiஇந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மோடியின் ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

நரேந்திர மோடி போட்டியிட்டு பின்னர் ராஜினாமா செய்த வதேராவில் பாஜக வெற்றி பெற்றாலும், பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

தெலுங்கானாவில் உள்ள மேடக் தொகுதியை மீண்டும் சந்திரசேகர ராவ் அவர்களின் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் மைன்பூரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 3 பாரளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

உத்தரபிரதேசம்.11 தொகுதிகள்

சமாஜ்வாடி ஜனதா கட்சி     8
பாரதிய ஜனதா                     3

குஜராத்: 9 தொகுதிகள்

பாரதிய ஜனதா         6
காங்கிரஸ்                 3

ராஜஸ்தான் 4 தொகுதிகள்

காங்கிரஸ்         3
பாஜக                  1

மேற்குவங்காளம் தேர்தல் நடந்த தொகுதிகள் 2

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி    1
பாரதிய ஜனதா         1

Leave a Reply