முதல்வர் நாராயணசாமி வெற்றி பெறுவாரா? அதிமுகவுக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவா?
கடந்த மே மாதம் நடைபெற்ற புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏவுக்கு போட்டியிடாத நாராயணசாமி,முதல்வராக தேர்வு பெற்றதால் அவர் தற்போது நடைபெறவுள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளருக்கு பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் நாராயணசாமி வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாஜகவும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே முதல்வருக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் அதிமுகவுக்கு விழுந்தால் முதல்வரின் வெற்றி சந்தேகமே என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.