செப்டம்பர் 17-ல் ‘புலி’யை திரையிட படக்குழுவினர் அதிரடி முடிவு?
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் முதலில் செப்டம்பர் 17ஆம் தேதிதான் ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய தாமதம் ஆனதால், சமீபத்தில் அக்டோபர் 1 என ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் செப்டம்பர் 17ஆம் தேதியில் புலி’ திரைப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் படக்குழுவினர் திரையிடுவது ரசிகர்களுக்காக அல்ல. சென்சார் அதிகாரிகளுகாக. ஆம். புலி’ படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டு சென்சார் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் படங்களுக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் அதிகம் என்பதால் அவரது பெரும்பாலான படங்கள் ‘யூ’சர்டிபிகேட் கிடைக்கும் வகையில்தான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.’புலி’ படமும் ‘யூ’ சர்டிபிகேட் கிடைக்கும் வகையில்தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும் இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு பெரும் உதவியாக இருக்கும். அதற்கு கண்டிப்பாக இந்த படம் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றே ஆகவேண்டும். சென்சார் அதிகாரிகள் என்ன சர்டிபிகேட் கொடுக்கவுள்ளனர் என்பதை 17ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.