‘இன்று நேற்று நாளை’ 2ஆம் பாகத்தில் சிவகார்த்திகேயன்?
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் சிறப்பு வேடத்தில் ஆர்யா நடித்த ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படவுள்ளதாகவும், அந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரே இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்குரிய கதையை இயக்குனர் ரவிகுமார் தயார் செய்துவிட்டதாகவும், இதுவும் டைம் மிஷின் குறித்த கதை என்றும், ஆனால் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் பிரமாண்டமாக இருக்கும் என்றும், இந்த படத்தின் ஹீரோயின் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.