கடந்த வருடம் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ரூ.1 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த சிவகார்த்திகேயன், தற்போது தன்னுடைய மார்க்கெட் ரேட் ஏறிவிட்டதாகவும், அதனால் ஐந்து கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் பிடிவாதமாக கூறி, லிங்குசாமி திரைபடத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்குசாமி, சிவகார்த்திகேயன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க உள்ளார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் உள்ள லிங்குசாமியின் ஆதரவாளர்களும், சிவகார்த்திகேயனின் குறுகிய கால அபார வளர்ச்சியை பிடிக்காத சிலரும் கூட்டணி சேர்ந்து சிவகார்த்திகேயனை இந்த விஷயத்தை பயன்படுத்தி ஒரேயடியாக முடக்க திட்டம் தீட்டியுள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஐந்து வருட தடை போட திட்டமிட்டு வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் தற்போது கோலிவுட்டில் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் கேள்விப்பட்டு சிவகார்த்திகேயன் எவ்வித அதிர்ச்சியும் இன்றி இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளாராம். அவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி போன்ற இளையதலைமுறை கதாநாயகர்கள் ஆதரவு கொடுத்துள்ளதால்தான் இந்த தைரியமாம்.