ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடமிருந்து கன்னத்தில் பளாரென அறை வாங்கிய கிறிஸ் ராக்கிற்கு லட்சக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
கிறிஸ் ராக் நடத்தும் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு இந்த நிகழ்வு காரணமாகஅதிகரித்துள்ளது
மேலும் குறைந்தபட்ச டிக்கெட் விலை 46 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் அது 341 டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஒரு மாதமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளை விட நேற்று ஒரே நாளில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது.