அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம். நடிகர் வில் ஸ்மித்
மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே தற்போது அமெரிக்க அதிபராக கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா இருந்து வரும் நிலையில் இன்னொரு கருப்பின தலைவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வில்ஸ்மித் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, “நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்றும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்றும் கூறியுள்ள அவர், முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற பேச்சுதான் தன்னை தீவிர அரசியலில் வலுகட்டாயமாக ஈடுப்பட தூண்டும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்த்லில் போட்டியிட விருப்பப்படுவதாக தெரிவித்த வில்ஸ்மித் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறினார். வில்ஸ்மித் அதிபர் தேர்தலில் நின்றால் அவரை பெருவாரியான அமெரிக்க மக்கள் ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Will Smith wants to be President of the United States