வேலை பார்க்காவிட்டாலும் மாதம் 2500 டாலர் சம்பளம். சுவிஸ் நாட்டின் புதுமையான அறிவிப்பு

வேலை பார்க்காவிட்டாலும் மாதம் 2500 டாலர் சம்பளம். சுவிஸ் நாட்டின் புதுமையான அறிவிப்பு

swissஉலகின் ஒருசில நாடுகளில் வேலை செய்தாலே சம்பளம் கொடுக்காமல் ஒருசில நிறுவனங்கள் இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்து நாடு தனது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் மாதம் ரூ.2500 வேலை செய்யாமலேயே சம்பளம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை அந்நாடு அறிவித்துள்ளது. உலகிலேயே சும்மா இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் திட்டத்தை இந்நாடுதான் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதிட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும் 2,500 டாலர் ஊதியத்தை அரசே வழங்கும். குழந்தைக்கு 625 டாலர் வழங்கப்படும். இதன் மூலம், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அனைத்து குடிமக்களும் நிரந்தரமான மாத ஊதியம் பெற வழி வகை செய்யப்படும்.

புதிதாக அறிமுகமாகமுள்ள இந்த திட்டத்திற்கு நேற்று சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதற்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம். எனவே, இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஜூன் 5-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அனைவருக்கும் மாதந்தோறும் பணம் கிடைப்பதால் கண்டிப்பாக பெரும்பான்மையான மக்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும், வாக்கெடுப்புக்கு பின்னர் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply