விஜய்யின் அரசியல் பிரவேசம். மதுரை பாராட்டுவிழாவில் அறிவிக்க திட்டம்.

vijayகுமுதம் வார இதழ் நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் தேர்தலில் வெற்றி பெற்ற இளையதளபதி விஜய்க்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் பாராட்டு விழா நடக்கவிருக்கின்றது. இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விழாவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட விஜய் முடிவு செய்திருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரம் உறுதியாக கூறுகிறது.

மதுரையில் நடைபெற இருக்கும் விழா குறித்து விஜய் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் ஆலோசனை செய்துள்ளார். அந்த சமயத்தில் விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் இருந்து ஏதாவது பிரச்சனை வரும் தாங்கள் ஊகிப்பதாகவும் இதற்கு ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர் மன்ற செயலாளர்கள் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர். அப்போது விஜய் தற்போதையை சூழ்நிலையில் இந்திய பிரதமரே நமது பக்கம்தான் இருக்கிறார். அதனால் நம்மை தமிழக அரசு ஒன்று செய்ய முடியாது. தைரியமாக வேலையை ஆரம்பியுங்கள். எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என விஜய் தைரியம் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறி வருகின்றனர். மேலும் இந்த பாராட்டு விழாவில் விஜய் அரசியலி நுழைவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட உள்ளார். என்றும், அதனால் தமிழகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பாராட்டு விழா கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்குமா? அல்லது கடைசி நேரத்தில் ஆப்பு வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply