மக்கள் நலக்கூட்டணியுடன் இணைகிறது தேமுதிக. இன்று ஒப்பந்தம் கையெழுத்தா?

மக்கள் நலக்கூட்டணியுடன் இணைகிறது தேமுதிக. இன்று ஒப்பந்தம் கையெழுத்தா?
vijayakanth
கேப்டன் தலைமையிலான கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு செய்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு கட்சி கூட அவருடைய தலைமையை ஏற்று வராததாலும், திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் தேமுதிக தங்களுக்கு தேவையில்லை என்கிற ரீதியில் கருத்து கூறியதாலும், வேறு வழியின்றி மக்கள் நலக்கூட்டணியில் இணைய தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துவிட்டதாகவும், அவர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக கோயம்பேடு அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்றும்இதற்கான அறிவிப்பு வெளிவரும் விரைவில் வெளி்யாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆளுங்கட்சிக்கு அதிருப்தியாக இருக்கும் வாக்குகளை மக்கள் நலக்கூட்டணியும், திமுக கூட்டணியும் சம அளவில் பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் நலக்கூட்டணிய்யில் விஜயகாந்த் இணைந்தால் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், தற்போது முக்கிய கேள்வி எந்த கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டும் என்பது தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply