தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் ‘எத்தனை ஆண்கள் வேண்டுமானாலும் வந்து என்னை பலாத்காரம் செய்யுங்கள்’ என பகிரங்கமாக இணையதளம் மூலம் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்ததை அடுத்து தொடர்ந்து பல பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்கதை போல் நீண்டு வரும் இந்த பலாத்கார சம்பவங்களுக்கு முடிவுகட்ட டெல்லியை சேர்ந்த மாதுரி தேசாய் என்ற அந்த பெண், ‘யூ டியூப்’பில் தன்னை பலாத்காரம் செய்ய பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1LKlYie” standard=”http://www.youtube.com/v/G7F9njIJQ_w?fs=1″ vars=”ytid=G7F9njIJQ_w&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3967″ /]
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பதிவு செய்த வீடியோவில், ‘வாருங்கள்… வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோயில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். நான் உங்கள் டாக்சியில் வருகிறேன்; என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த பெண்ணின் வீடியோ தலைநகர் டெல்லியை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு இது ஒரு சாட்டையடியாக இருந்தபோதும், ஆண்கள் அச்சமின்றி பலாத்காரம் செய்யவும் இந்த வீடியோ தூண்டுவதாக ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.