2015ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட 3 விஞ்ஞானிகள்

2015ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட 3 விஞ்ஞானிகள்
nobel
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களுக்கு உலகின் மிகப்பெரிய விருதான நோபல் பரிசு அளித்து கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்தின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவரும் கூட்டாக பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படும் இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளாக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

ஒன்று, நாக்குப் பூச்சு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் மற்றும் சடோசி ஓமுரா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மற்றொன்று, மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயு து என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற மூவருக்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply