விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: காலிறுதியில் வீனஸ் தோல்வி, செரீனா அபார வெற்றி
விம்பிள்டன் காலிறுதி போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகிய சகோதரிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை வீனஸ் வில்லியம்ஸ் இழந்தார். அவர் ஜெர்மனியின் ஏஞ்சலிக்யூ கெர்பரிடம் காலிறுதியில் தோல்வி அடைந்தார். இதனால் இரு சகோதரிகளும் இறுதிப்போட்டியில் மோதுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்த போதிலும் செரீனா வில்லியம்ஸ் காலிறுதிப்போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலேனா வெஸ்னினாவை 6-2, 6-0 என்ற நேர் செட்டுக்களில் மிக எளிதாக வென்றார்.
எனவே இறுதிப்போட்டிக்கு ஏஞ்சலிக்யூ கெர்பருடன் செரீனா வில்லியம்ஸ் மோதவுள்ளார். இதில் சாம்பியன் பட்டம் வென்றால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெஃபிகிராபின் சாதனையை சமன் செய்த வீராங்கனை என்ற புகழை செரீனா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.