விம்பிள்டன் டென்னிஸ்: கால் இறுதியில் மோதும் வீரர்களின் விபரங்கள்

விம்பிள்டன் டென்னிஸ்: கால் இறுதியில் மோதும் வீரர்களின் விபரங்கள்

wimbledon-610x400லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆன்டிமுர்ரே ஆஸ்திரியாவை சேர்ந்த நிக் உடன் மோதினார். இந்த போட்டியில் முர்ரே 7-5, 6-1, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் பிரான்ஸ் வீரர் சோங்காவை எதிர்கொள்வார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் ரோனிக் (கனடா) 4-6, 3-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். இந்நிலையில் தற்போது கால் இறுதியில் மோதும் வீரர்கள் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

1. ரோனிக் (கனடா) – சாம்குயரி (அமெரிக்கா)

2. ரோஜர் பெடரா (சுவிட் சர்லாந்து) – சிலிச் (குரோ ஷியா)

3. லுகாஸ் பவுல்லி (பிரான்ஸ்) – தாமஸ் பெர்டிச் அல்லது வெஸ்லி (செக் குடியரசு)

4. ஆன்டி முர்ரே (இங்கி லாந்து) – சோங்கோ (பிரான்ஸ்).

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- சுராஸ் (ஸ்பெயின்) மோதி னார்கள். இதில் வீனஸ் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையாக செரீனா எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற் றார். 28-ம் நிலை வீராங் கனையான ‌ஷப்ரோவா (செக்குடியரசு) 2-6, 4-6 என்ற கணக்கில் யாரோ ஸ்லாவாவிடம் (கஜகஸ்தான்) தோற்றார்.

கால்இறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்:-

1. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – அனஸ்டசியா (ரஷியா)

2. சிபுல்கோவா (சுலோ வாக்கியா) – எலீனா வெஸ் னியா (ரஷியா)

3. ஷிமோனா ஹெலப் (ருமேனியா) – கெர்பர் (ஜெர்மனி)

4. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) – யாரோஸ் லாவா (கஜகஸ்தான்).

Leave a Reply