விண்டோஸ் 8 அடிப்படையில் தொடுதிரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும்.
இருப்பினும் இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.
இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தேடல்
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனுவினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக்(Aero peek) பெற.
சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட்(Switch List) திறக்க.
பேனர்கள்
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H – ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K – புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்
Win + Print Scrn – இந்த கீகளை அழுத்துகையில் திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.