விப்ரோ நிகர லாபம் 1.6% சரிவு

விப்ரோ நிகர லாபம் 1.6% சரிவு

wiproநாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 1.6 சதவீதம் சரிந்து 2,235 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் 2,272 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் வருமானம் 12.9 சதவீதம் உயர்ந்து 13,741 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 12,171 கோடி ரூபாயாக இருந்தது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 2.7 சதவீதம் உயர்ந்து 8,892 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல மொத்த வருமானம் 9.1 சதவீதம் உயர்ந்து 51,630 கோடி ரூபாயாக இருக்கிறது.

நிறுவனத்தின் 4 கோடி பங்கு களை திரும்பி வாங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.2,500 கோடி ஆகும். மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 1,72,912 பணியாளர்கள் விப்ரோவில் இருக்கின்றனர். கடந்த காலாண்டில் 119 வாடிக்கையாளர்களை நிறுவனம் சேர்த்திருக்கிறது.

2020-ம் ஆண்டில் 1,500 கோடி டாலர் வருமானத்தை ஈட்ட நிறுவனம் இலக்காக வைத்திருக்கிறது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபித் அலி நீமுச்வாலா தெரிவித்தார்.

Leave a Reply